கொண்டச்சி முகாம்.
21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த சிங்கள இராணுவமுகாம் எமது வீர்களின் தாக்குதலுக்கு உள்ளானது ,சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலின் பின் அந்த இராணுவ முகாம் எமது வீரர்களிடம் விழ்ச்சி கண்டது சக்தி வாய்ந்த பவள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட கவசவாகனம் ஒன்று உட்பட 24 ஆயுதங்களை எமது வீர்கள் கைப்பற்றியிருந்தார்கள் .
இம்முகாம் தாக்குதலின் போது 2ம் லெப்டினன்ட் கிறிஸ் ரீன் மேஜர் வசந்த் ,கப்டன் தனபால் ,லெப்டினன்ட் கோபிநாத் ,லெப்டினன்ட் சுப்பிரமணி ,வீரவேங்கை பிக்கன்ஸ் ,வீரவேங்கை சுபித்திரன்,வீரவேங்கை சாந்தா ,வீரவேங்கை பஞ்சன் ,வீரவேங்கை மேனன் , வீரவேங்கை ரமணி ,வீரவேங்கை குவேந்திரன் உட்பட பன்னிருவர் வீரச்சாவை தழுவினர்
கொண்டச்சி முகாம் தகர்ப்பில் தமிழீழ விடுதலை புலிகளால் கைப்பற்றப்பட்ட பவல் கவச வண்டி